Categories
உலக செய்திகள்

முடிசூட்டும் விழா வேண்டாம்… இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி திடீர் அறிவிப்பு…!!!

பிரிட்டன் நாட்டின் இளவரச தம்பதியான வில்லியம் மற்றும் கேட், வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா, தற்போது நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

பிரிட்டன் நாட்டின் மகாராணியார் மரணமடைந்ததை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னரானார். அதனை தொடர்ந்து அவரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவி இளவரசி கேட் இருவரும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியாக முடிசூட்டும் விழா நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தற்போது அதற்கான திட்டம் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். மேலும் மக்களிடம் தங்களுக்கு மரியாதையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்த உழைக்கப்போவதாக கூறியிருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஒரு தடவை வேல்ஸ்  மக்களை சந்திப்பதற்கு செல்ல இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

எனினும், இளவரசர் வில்லியமின் தந்தை சார்லஸ், இளவரசராக முடிசூட்டிய போது அந்த விழா Caernarfon என்ற கோட்டையில் நடந்தது. அது ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, இளவரசராக முடிசூடிய மன்னர் சார்லஸிற்கு 20 வயது. ஆனால் தற்போது, அந்த அளவிற்கு பெரிதாக முடி சூட்டும் விழா பழமையான விஷயம் என்று இளவரசர் வில்லியமும் அவரின் மனைவி கேட்டும் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |