மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார் ஏலத்திற்கு வர இருக்கும் நிலையில் அது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளிவந்திருக்கிறது.
இங்கிலாந்து இளவரசி டயானா இறந்து 25 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் அவரின் விருப்பமான போர்ட் எஸ்கார்ட் ஆர்.எஸ் என்ற கார் ஏலத்தில் விற்கப்பட இருக்கிறது. 1985 ஆம் வருடத்தில் இருந்து 1988 ஆம் வருடம் வரை அவர் இந்த வாகனத்தை பயன்படுத்தியிருக்கிறார். ஏல நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்ததாவது, இளவரசி பயன்படுத்திய கார் 132 குதிரைகளின் திறனுடையது.
அரச குடும்பத்தை சேர்ந்த பலர் பயன்படுத்திய மோட்டார் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறோம். எனினும், இந்த வாகனம் வரலாற்று சிறப்புமிக்கது. மிகவும் அரிதானது. பெரும்பாலும், ராஜ குடும்பத்தில் ரோல்ஸ் ராய்ஸ் அல்லது ரேஞ்ச் ரோவர்ஸ் வாகனங்கள் தான் ஏலத்தில் விற்பனைக்கு வரும். ஆனால், இந்த கார் தனித்தன்மை கொண்டதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.