டெஸ்லா நிறுவனத்தின் CEO தனது காதலியை விட்டு பிரிந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகப் பணக்காரர்களில் ஒருவர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், டெஸ்லா நிறுவனத்தின் CEO போன்ற பன்முகத்திறமையாளர் எலான் மஸ்க். இவர் தனது காதலியான கிரிம்ஸை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை எலான் மஸ்கே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். ஆனால் கிரிம்ஸ் உடன் எனக்கு நல்ல உறவே உள்ளது. மேலும் எங்களுடைய குழந்தையை நாங்கள் சேர்ந்தே தான் வளர்க்கவுள்ளோம். நாங்கள் இருவரும் இன்னும் ஒருவருக்கொருவர் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எங்களுடைய உறவு சிறப்பான ஒன்றாகும்.குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தில் பணிச்சுமை காரணமாக பெரும்பாலான நேரத்தை நான் அங்கு தான் செலவிடுகிறேன். எனது பணியின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் என்னுடைய காதலியான கிரிம்ஸ் லால் ஏஞ்சலில் பணிபுரிகிறார். அவர் தற்பொழுது என்னுடன் வசித்து வருகிறார். மேலும் எங்களின் அறைக்கு பக்கத்தில் தான் குழந்தையின் அறையும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த மாத துவக்கத்தில் மெட் காலா நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றிருந்தாலும் சிவப்பு நிற கம்பளத்தில் கிரிம்ஸ் மட்டுமே தனியாக நடந்துள்ளார். இதன் பின்பு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்கு இருவரும் சேர்ந்து வந்துள்ளனர். இதேபோன்று கடந்த வாரம் கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவியான நிக்கோல் ஷனஹான் நடத்திய விருந்தோம்பலில் கூட எலான் தனியாக கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதன் முதலாக எலானும் கிரிம்ஸ்ம் டேட்டிங் செய்துள்ளனர்.