தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை பொழிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, தமன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அழகி மரியா, நடிகர் பிரேம்ஜி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த தகவலை பட குழு ஒரு போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.