Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் தமிழருக்கே முன்னுரிமை”….. தனியாரில் 80% உறுதி வேலை வாய்ப்பு….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓசூர் அருகே அமைக்கப்பட்ட வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை.

டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 18 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2348 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 80 சதவீதம் தமிழருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அந்த நிறுவனம் உறுதி அளித்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். ஆனால் அதற்கான உத்திரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. இதை தமிழக அரசே செய்ய முடியும் என்ற நிலையில் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் உத்தரவாதமற்ற உறுதிமொழிகளை நம்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம்‌ இல்லை. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் தமிழருக்கே கிடைக்க வேண்டும். தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்க உறுதி செய்யும் சட்டத்தை வருகிற ஜனவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |