Categories
தேசிய செய்திகள்

சிறையில் கண்கலங்கிய சசிகலா… காரணம் இதுதான்… வெளியான தகவல்..!!

பெங்களூரு பரப்பன சிறையில் சுமார் 10 நிமிடம் சசிகலா கண் கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1991-96 ஆம் ஆண்டு  ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 4 பேருக்கும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா உயிர் இழந்த காரணத்தினால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரையும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் சிறை தண்டனை காலம் முடிவடைகின்றது. இதனிடையே 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை துறை பதிலளித்தது. அபராத தொகையை செலுத்தவில்லை என்றால் சசிகலாவின் சிறை தண்டனை மேலும் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாகவே அவரின் அபராத தொகை 10 கோடியே 10 லட்சம் செலுத்தப்பட்டது. அவர் எப்போது விடுதலை ஆவார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

அந்த வகையில் ஜெயலலிதாவின் தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சிறையிலிருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது சசிகலா பத்து நிமிடம் கண்கலங்கி அழுததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சிறைத்துறை அதிகாரிகள் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். எளிய பின்னணியில் இருந்து வந்த சசிகலாவை தனது உடன் பிறந்த சகோதரியாக அங்கீகரித்தவர் ஜெயலலிதா. நெருக்கடியான சூழ்நிலையிலும் ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக நின்றவர் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |