Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த குற்றத்திற்காக  நெசவுத் தொழிலாளிக்கு  7  – ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். கடந்த 10-12-2018 தேதியன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக மகளிர் காவல் துறையினர் கருப்பசாமியை கைது செய்துள்ளனர்.

அதன் பிறகு இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில்  கருப்பசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 35 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |