வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காந்தி சிறை வைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா? வெள்ளையனை வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்காக அழைப்பு தொடர்ந்து ஏற்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சிஎன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை துரிதமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி கைது செய்யப்பட்டார். அவர் புழல் சிறையில் வைக்கப்பட்டார். அந்த இடம் இப்போது எப்படி இருக்கு தெரியுமா? அது தெரிந்தால் வாயை பிளப்பீர்கள். மராட்டிய மாநிலத்தின் புனே நகரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த கோட்டை.
இது சுல்தான் முகமது ஷா ஆகா கான் என்பவரால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட ஆண்டு 1892, இத்தாலிய முறைப்படி கட்டப்பட்ட இந்த கோட்டை மிகவும் அழகானதாக இருக்கும். நேரில் காண்போரை வியக்கச் செய்யும். இந்த கோட்டை ஐந்து பிரமாண்ட அறைகளை கொண்டது. மொத்த அரண்மனையும் 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை மட்டும் 7 ஏக்கர், ரூபாய் 1.2 மில்லியன் இந்திய பணம், இந்த கோட்டையை கட்டி முடிக்க செலவாகியுள்ளது. இந்த கோட்டையின் தரைதளம் 1756 சதுர மீட்டர் அளவில் உள்ளது. முதல் தளம் 1080 சதுர மீட்டர் அளவிலும், இரண்டாம் தளம் 445 சதுர மீட்டர் அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.