அதிமுகவின் ஊழலை அம்பலப்படுத்துவதில் கடுகளவும் பின்வாங்கமாட்டோம் என்று திமுக அமைப்பு செயளாலர் தெரிவித்துள்ளார்.
சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறும் போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் மாலை 4.30 மணியளவில் என்னை ஜாமீனில் விடுவித்து இருக்கிறார். உத்தரவு என்னவென்றால் தேவைப்படும்போது நான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளார்கள். எடப்பாடி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வது என்னெவென்றால், சென்னை மாநகரம் இன்றைக்கு கொரோனாவில் திணறிக் கொண்டிருக்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசாங்கம் திமுகவினரை கைது செய்வதை விட்டுவிட்டு அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்கு, தளபதி அவர்கள் சொல்லும் யோசனை கேட்டு மக்களை காப்பாற்றுங்கள்.நாங்கள் சொல்லும் யோசனைகளை ஏற்று செயல்பட வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தை கைவிட்டு விட்டு கொரோனவை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் கழகத்தின் அமைப்புச் செயலாளர் என்ற முறையில், தலைவர் என்ன செய்கிறார்களோ அதை செய்வேன். இந்த ஆட்சியின் ஊழலை தோலுரித்துக் காட்டுவதில் கடுகளவும் பின்வாங்க மாட்டோம். சிறைச்சாலை ஒன்றும் எங்களை ஒன்னும் செய்து விடாது என்று தெரிவித்தார். அது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது அதிமுக அரசு மீதான ஊழல் புகாரில் கடுகளவும் பின்வாங்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.