மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு நீதிபதி 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் வசிக்கும் மருதராஜ் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் +2 பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதியான தனசேகரன் என்பவர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சங்கரநாராயணன் என்பவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியை மிரட்டிய மருதராஜ் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.