கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், கைதி பற்றி சுவாரஸ்ய அனுபவங்களை நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டார்.
நடிகர் கார்த்திக்கின் நடிப்பில் லோகேஷு கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படம் சிறை வாழ்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதை. இது நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில் கைதி படத்தின் அனுபவங்களை நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் , இந்த மாதிரி படத்தை மிஸ் பண்ண மாட்டேன். சிறந்த கூட்டு முயற்சி. எல்லாருமே புரிஞ்சுகிட்டு நல்லா வேலை செய்தார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.
ரொம்ப அருமையான டீம் , மனஅழுத்தம் இல்லாமல் நடித்தேன். கைதி இரண்டாம் பாகம் கதை முடிவாகியுள்ளது ஒரு 30 நாள் டைம் கொடுங்க கைதி 2 படத்தை முடித்து விடலாம் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்தாக நடிகர் கார்த்தி கூறினார். அந்த படத்தில் லாரி ஓட்ட சொன்னார்கள் . அலசி அலசி ஒட்டுறதுனா என்னானு கத்துக்கிட்டேன். லாரி ஓட்டுவது சாதாரணமானது கிடையாது. எனக்கு ஒரு பொண்ணு இருக்குறதுனால அந்த படத்தின் ரொம்ப எமோஷனல் அப்படியே புரியுது என்றும் கூறினார்.