ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்கோம்பை கிராமப் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் உட்பட 7 பேரை கடந்த மாதம் 16-ஆம் தேதி டி.என் பாளையம் வனத்துறையினர் யானை தந்தத்தை கடத்திய வழக்கில் கைது செய்தனர். இதனை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்ட குமார் கோவையில் இருக்கும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மணியாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர்.