பிரித்தானியாவுக்குள் ஆங்கில கால்வாயைக் கடந்து வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அவர்களை ஆப்பிரிக்க நாட்டின் ருவாண்டாவிற்கு அனுப்ப ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பில் “இதற்காக அந்நாட்டுடன் பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ரகசிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரீத்தி பட்டேலின் Nationality and Borders bill என்னும் மசோதா நிறுவனத்திற்கான அமைச்சர்கள் புலம்பெயர்வோரை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அவர்களது புகலிடக் கோரிக்கையை பரிசீலிக்க காத்திருப்பதாக” கூறப்படுகிறது.
மேலும் டைம்ஸ் செய்தி நிறுவனம் ருவாண்டாவுடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின் ராஜ குடும்பத்தின் அங்கீகாரத்தையும் பெற்ற பிறகு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட Durham Bishop Rt Rev Paul Butler கூறியதாவது “மக்கள் பாதுகாப்பு தேடி அந்நாட்டின் கரையில் வரும்போது நாம் உயிருக்கு பயந்து ஓடும் போது அவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதே போலவே மற்றவர்களின் நடத்த வேண்டியது நம் கடமை” என்று கூறியுள்ளார்.