பிரித்தானியா இளவரசர் அவரின் வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை 4 பிரிவாக வெளியிடவுள்ளார்.
பிரித்தானிய நாட்டு மகாராணியின் பேரனும் இளவரசருமான ஹரி அவரது வாழ்க்கை தொடர்பான முழு தகவல்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சம்பவத்திற்காக முதன்மை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புத்தகம் நான்கு பாகங்களாக அமையும். அதில் முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், 2வது புத்தகம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னரும் வெளியாகும். இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் ஹரியின் மனைவி மேகணும் புத்தகம் ஒன்றை வெளியிடவுள்ளார்.
ஆனால் சமீபத்தில் சிறுவர்களுக்கு என அவர் எழுதிய புத்தகம் மக்களிடம் அதிக வரவேற்பை பெறவில்லை. மேலும் ஹரி தமது வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை புத்தகங்களாக வெளியிட 18 மில்லியன் பவுண்டுகள் முதலில் பேரம்பேசிய நிலையில் இறுதியாக 29 மில்லியன் பவுண்டுகளுக்கு முடிவானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து மகாராணியார் மறைவுக்குப் பின் ஏன் வெளியிடப்படுகிறது என்ற கேள்வியும் புத்தகத்தில் ராணியாரை குறித்து ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகங்களும் மேலெழும்பியுள்ளன.