பூஸ்டர் தடுப்பூசிகளை வரும் செப்டம்பரில் இருந்து செலுத்தவுள்ளதாக பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேலானவர்கள், மருத்துவ பிரச்சனைகள் உள்ளவர்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியானது முதலில் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குளிர்காலத்தில் உருவாகும் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இரண்டாவதாக போடப்படும் என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் கொண்டவர்களுக்கு 6 மாதத்திற்கு பாதுகாப்பு இருக்கும் என்பதற்கான முக்கிய தரவுகள் இருப்பதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் தடுப்பூசிகள் தேவையா என்பது பற்றி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இதற்கிடையில் அரசானது உரிய ஆலோசனைகள் பெற்ற பின்னரே செப்டம்பரில் இருந்து தடுப்பூசிகள் போடப்படும் என அறிவித்துள்ளது. மேலும் குளிர்காலத்தில் செலுத்தப்படும் தடுப்பூசியுடன் இரண்டு தடவையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் 60 மில்லியன் தடுப்பூசிகளை பைசர் நிறுவனத்திடமிருந்து வாங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.