பிரித்தானியாவிற்கு ஆப்கானில் இருந்து அகதிகளாக வருபவர்களில் தீவிரவாதிகளும் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரான Rasuili Zubaidullah என்பவர் பிரித்தானியாவிற்குள் கால்வாய் வழியாக அகதிகளின் படகில் போலியான பெயரில் நுழைந்துள்ளார். இவர் சுமார் 15 நாட்களாக தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவர் ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் Leonie என்ற 13 வயது பெண்ணை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்தப் பெண் 16 வயது இளைஞர் மற்றும் Rasuili ஆகிய இருவரையும் சந்திப்பதற்காக ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். இதன் பிறகு அங்கிருந்து மூவரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளனர். அங்கு Leonieயின் பானத்தில் ஒருவர் போதைப்பொருளை கலந்து கொடுத்துள்ளார். இதனையடுத்து Leonieயை அங்கிருந்தவர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து Leonieயின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவரை ஒரு போர்வையில் சுற்றி வீசியுள்ளனர். ஏற்கனவே இருவருமே நாடு கடத்தப்பதுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தான் இது போன்றதொரு படுகொலையை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் Rasuili பிரான்ஸ்க்கு சென்று அங்குள்ள கடத்தல் கும்பலுக்கு பணம் கொடுத்து கால்வாய் வழியாக பிரித்தானியாவிற்கு நுழைந்துள்ளார். இதற்கிடையில் ஆப்கான் அகதிகள் சிலர், நாங்கள் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் பழகி அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டதாக இணையத்தில் தெரிவித்திருந்தனர். இதனை கவனித்த போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
அப்பொழுது தான் அந்தப் பெண் படுகொலை குறித்து ஆஸ்திரியா போலீசார் பிரித்தானியா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு Rasuiliயை கைது செய்து அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இது போல குற்றவாளிகள் அகதிகள் போன்று பிரித்தானியாவிற்குள் நுழைவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அகதிகளாக வருபவர்களிடம் அடையாள அட்டை கூட இல்லை. இந்த சம்பவம் குறித்து புலம்பெயருதலை கண்காணிக்கும் நிபுணர் கூறியதில் “ஆப்கானில் இருந்து குற்றவாளிகள், தீவிரவாதிகள் போன்றோர் பிரித்தானியாவிற்குள் நுழையலாம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்” என்று கூறியுள்ளார்.