Categories
உலக செய்திகள்

‘வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்’…. போக்குவரத்துச் செயலாளர் தகவல்…. எதிர்ப்பு தெரிவிக்கும் அமைச்சர்கள்….!!

வெளிநாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு திரும்பும் மக்கள் அரசு அனுமதி பெற்ற விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று மீண்டும் பரவ அதிக வாய்ப்புள்ளதால் பிரித்தானியா இன்னும் சில நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்துள்ளது. இதனால் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பிரித்தானியா மக்கள் இங்கு வந்தவுடன் அரசு அனுமதி பெற்ற விடுதியில் 11 இரவுகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்று தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு  2285 பவுண்டு செலுத்த வேண்டும். இந்த செய்தியானது பிரித்தானியாவிற்கு திரும்பும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rt Hon Grant Shapps MP (@grantshapps) | Twitter

ஆனால் இது குறித்து போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியதில் “மக்கள் விடுதிகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக வீட்டிலேயே சுயதனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். ஆனால் இந்த தகவல் உண்மையா என்பது தெரியவில்லை. இவரின் இந்த முடிவிற்கு சுகாதாரத்துறை அமைச்சரான சஜித் ஜாவித் உட்பட பல்வேறு முக்கிய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதுவரை சிவப்பு பட்டியல் நாடுகளிலிருந்து இரண்டு லட்சம் மக்கள் அரசு அனுமதி பெற்ற விடுதியில் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். எனினும் இந்த திட்டத்திற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் விடுதியில் போதிய வசதி இல்லை என்று கூறப்படுகிறது. சான்றாக, பயணி ஒருவர் தங்கியிருந்த விடுதியில் எலி இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பிரித்தானியா அரசு கொரோனா தொற்று மற்றும் புதிய வகை வைரஸ் பரவலை தடுப்பது மிகவும் அவசியம் என்று கூறிவிட்டது.

இதற்கிடையில் நாளை காலை 4 மணி முதல் தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ போன்ற 47 நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து அகற்றப்படவுள்ளன. மேலும் Colombia, the Dominican Republic, Ecuador, Haiti, Panama, Peru மற்றும் Venezuela போன்ற சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகள் விடுதியில் தனிமைப்படுத்துதலுக்கான சில விதிமுறைகள் மாற்றமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் PCR பரிசோதனைக்கு பதிலாக lateral flow சோதனை மேற்கொள்ளலாம் என்ற விதிமுறை விரைவில் அமல்ப்படுத்தப்படும் என்று போக்குவரத்து செயலாளர் Grant Shapps கூறியுள்ளார்.

Categories

Tech |