Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் களம் காணக் காத்திருக்கும் பிரித்வி ஏவுகணை…..!!

இந்திய அணியின் தொடக்க வீரரான பிரித்வி ஷா மீண்டும் அணியில் இடம்பிடிப்பேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் தனது பேட்டிங் திறமையின் மூலம் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் பிரித்வி ஷா. இவர் ஊக்கமருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டதினால், பிசிசிஐயின் மூலம் எட்டு மாதத் தடையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 20ஆவது பிறந்த நாளைக் காணும், பிரித்வி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அந்த பதிவில், ‘இன்று என்னுடைய 20ஆவது பிறந்த நாள், இந்த பிறந்த நாளிலிருந்து நான் என்னுடைய அடுத்த வடிவமான 2.0விற்கு முன்னேறுவேன் என உறுதியெடுத்துள்ளேன். எனக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கும், ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிக்கின்றேன். விரைவில் நான் இந்திய அணிக்குத் திரும்புவேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவோடு பிரித்வி ஷா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் காட்சியையும் இணைத்துள்ளார். தற்போது பிரித்வியின் இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |