Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரித்வி ஷா , ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் …7 விக்கெட் வித்தியாசத்தில் …சென்னையை வீழ்த்தி ,டெல்லி அணி வெற்றி …!!!

மும்பையில் நேற்று நடைபெற்ற ,சிஎஸ்கே – டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகளுக்கு இடையேயான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

2021 சீசனில்  ஐபிஎல் போட்டி திருவிழா நேற்று முன்தினம் ,சென்னையில் தொடங்கியது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் ,2வது லீக் ஆட்டத்தில்  சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ்  அணி  பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்தது.

இதில் சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்து 54 ரன்களை எடுத்தார். மொயீன் அலி 36 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும் ,அம்பத்தி ராயுடு 23 ரன்களும் எடுத்தனர். அதிரடி ஆட்டத்தை காட்டிய சாம் கரன் 15 பந்துகளில்  4 பவுண்டரி , 2 சிக்சர்களை அடித்து 34 ரன்கள்  எடுத்தார். இதைத்தொடர்ந்து 189 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா – ஷிகர் தவான் ஜோடி களமிறங்கியது. தொடக்க ஆட்டத்திலேயே  டெல்லி அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. சென்னை அணியின் பந்து வீச்சுக்களையெல்லாம் சிக்சர்களாக ,பவுண்டரிகளாக  அடித்து  விளாசினர் .

பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் அரைசதம் அடித்தனர். இதன்பின் ப்ரித்வி ஷா 38 பந்துகளில் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் களமிறங்கினார். டெல்லி அணி 167 ரன்களை பெற்றிருக்கும் போது ஷிகர் தவான் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து  ஸ்டாய்னிஸ் 14 ரன்களில் வெளியேறினார். இறுதிகட்டத்தில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியது . டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Categories

Tech |