பிரிட்டனில் குறிப்பிட்ட சில இடங்களில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் தற்போது அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் குறிப்பிட்ட 13 இடங்களில் கொரோனா நோயின் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக Derbyshire மற்றும் Yorkshire உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால் கடந்த சில வாரங்களின் அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மற்றொருபுறம் பிரிட்டனில் இந்த வாரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களையும் சேர்த்து இதுவரை இறப்பு எண்ணிக்கை 1,00,000-த்தை தாண்டியுள்ளது.
தற்போது இங்கிலாந்தில் உள்ள 315 உள்ளூர் இடங்களில் 13 பகுதிகளில் 4 % கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் அதேசமயம் 306 பகுதிகளில் 96 % கொரோனா பரவல் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை வரை கொரோனா பாதிப்பு அதிகரித்த 13 பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாசெட்லா, நாட்டிங்ஹாம்ஷைர்
டெர்பிஷயர் டேல்ஸ்
ஃபைல்ட், லங்காஷயர்
பாஸ்டன், லிங்கன்ஷைர்
வேக்கர்ஃபீல்ட், மேற்கு யார்க்ஷயர்
பிராட்போர்டு, மேற்கு யார்க்ஷயர்
தெற்கு டெர்பிஷயர்
பார்ன்ஸ்லி, தென் யார்க்ஷயர்
ரஷ்க்ளிஃப், நாட்டிங்ஹாம்ஷைர்
கிழக்கு நார்தாம்ப்டன்ஷைர்
வட கிழக்கு டெர்பிஷயர்
வடக்கு டைன்சைட்
கால்டர்டேல், மேற்கு யார்க்ஷயர்