பிரிட்டனில் வரும் வாரத்தில் 5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று NHS எதிர்பார்த்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு கொரானா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் சென்ற வார ஞாயிற்றுக்கிழமை வரை 24, 453, 221 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வாரம் முழுவதும் 2, 07,5, 966 பேர் தடுப்பூசியின் முதல் டோசை பெற்றுள்ளனர். குறிப்பாக அந்த வாரத்தின் சனிக்கிழமையில் மட்டும் 5,12,108 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனில் நாளுக்குநாள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வருகின்ற வாரத்தில் மட்டும் குறைந்தது ஐந்து மில்லியன் பேருக்காவது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தப்பட்டு விடும் என்று National Health Service – NHS எதிர்பார்த்துள்ளது.