பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் உருவாகி பெரிய பாதிப்பை ஏற்படுத்தயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனில் ராட்சத பனிப்புயல் ஒன்று உருவாகயிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரிட்டனில் கடும் மழை மற்றும் பனி உருவாகி பெரிய பாதிப்பு ஏற்பட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், “ஸ்காட்லாந்தில் வெப்பநிலை -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் வெப்பநிலை -6 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது.
இதனால் பிரிட்டனில் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். உயரமான பகுதிகளில் 40 சென்டிமீட்டர் அளவுக்கும், தாழ்வான பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவிற்கும் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரங்களுடன் இணைப்பில் இருக்கும் கிராமப் பகுதிகள் துண்டிக்கப்படலாம் .
மேலும் கிராமப்புறங்களில் மின்சாரம் துண்டிக்கப்படலாம். இந்த பனிப்புயலால் அங்கு வாழும் மக்கள் ஒரு மோசமான சூழ்நிலையை சந்திக்க வாய்ப்புள்ளது . இங்கிலாந்தில் பெரும் வெள்ளம் ஏற்படலாம் என்பதால் சுமார் 200 இடங்களுக்கு மேல் ஏற்கனவே பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.