Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தயாராகும்,டொயோட்டாவின் சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார்…!!!

டொயோட்டாவின் புதிய  சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார் அறிமுகமாகியுள்ளது

உலக கார் நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி ஓடி  கொண்டிருக்கும் போது டொயோட்டா நிறுவனமானது மற்ற  நிறுவனங்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பங்களை தன்னுடைய தயாரிப்புகளில் புகுத்தி ஹைபிரிட் மாடல்,பேட்டரி மாடல் போன்றவற்றை மற்ற  நிறுவனங்களுக்கு  முன்னதாகவே அறிமுகப்படுத்தியது.
சூரிய தகடு மேற்கூரையோடு தயாராகிறது டொயோடா பிரியுஸ் பேட்டரி கார்
பேட்டரி காரைப் பொருத்தவகையில் சார்ஜானது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமானது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்களை கொண்ட மற்ற பேட்டரி கார்களை விட 45 கி.மீ. தூரம் கூடுதலாக ஓட கூடிய  சோலார் மேற்கூரை கொண்ட பிரியுஸ்  பேட்டரி காரை தயாரித்து  சோதனை ஓட்டம்  செய்துள்ளது.
டொயோட்டா பிரியுஸ் கார்
இந்த  சூரிய மின் பலகையானது  0.3 மில்லிமீட்டர் தடிமன் கொண்டதாகவும் காரில் மேற்கூரை,பின் பகுதி,முன்பக்க பானெட் என்று அனைத்து பகுதியிலும்  சூரிய தகடுகள் அமைக்கப்பட்டு  மின்சாரமானது பேட்டரியை சார்ஜ் செய்யவும் தொடர் மின் விசையால் காரானது செயல்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கார் ஓடிக்கொண்டு இருக்கும் போதே சூரிய மின் பலகையின் மூலம்  மின்சாரத்தை உற்பத்தி செய்து பேட்டரிக்கு அனுப்புகிறது.இதனால் கார்  பேட்டரியை  தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருக்காது.

Categories

Tech |