சென்னை தனியார் கல்லூரி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
சென்னை பெருங்களத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லுரி பள்ளி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு யினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் தனியார் பேருந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முதல் கட்டமாக போலீசார் அங்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பள்ளி பேருந்து திடீரென தீ பிடித்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.