மின்சாரத்துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அவர் உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
மேலும் இந்த காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.
மின் வினியோகத்தில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். எந்த விநியோக நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெறலாம் என வாடிக்கையாளர்கள் முடிவு செய்யலாம். மாநில மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்த ரூ.3.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.