பெங்களூருவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மிகக் குறைந்த விலையில் தரமான வெண்டிலட்டரை தயாரித்து தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சிறப்பான சிகிச்சைகள் அளித்து வருகிறது.
பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கக்கூடியது வெண்டிலேட்டர் தான். இவர்களது உயிரை பாதுகாக்கும் முக்கிய கருவியாக இது செயல்படுகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ மின்சாரமின்றி இயங்கும் வெண்டிலேட்டரை பெங்களூரைச் சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
எலக்ட்ரானிக் பாகங்கள் எதுவும் இல்லாமல் தேவையான ஆக்சிஜன் வழங்கும் திறன் கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூபாய் 2500 மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி காலத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பை வழங்கிய அந்நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.