சிலி நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் தவறுதலாக, பணியாளர் ஒருவருக்கு மாத தொகைக்கு பதிலாக 1,42,000 ரூபாய் செலுத்தியிருக்கிறது.
சிலி நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தங்கள் பணியார்களுக்கு ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கின் மூலம் ஊதியத்தை வழங்கி வந்தது. இதனால், சில சமயங்களில் தவறுதலாக இரண்டு மாதங்களுக்கான ஊதியத்தை அந்நிறுவனம் செலுத்துவது உண்டு. எனவே, அந்நிறுவனம், அது குறித்து விசாரித்ததும் தகுந்த பணியாளர்களும் அந்த பணத்தை திரும்ப கொடுத்துவிடுவார்கள்.
சில சமயங்களில் குறைந்த ஊதியமும் செலுத்தப்படும். ஆனால், சமீபத்தில் அந்த நிறுவனம் ஒரு பணியாளருக்கு சுமார் 286 மாதங்களுக்கான ஊதியத்தை தவறுதலாக ஒரே நேரத்தில் செலுத்திவிட்டது. அந்தப் பணியாளருக்கு மாத ஊதியமானது 40,000 ரூபாய். ஆனால், நிறுவனம், ஒரு கோடியே 42 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டது.
உடனடியாக நிறுவனம் உரிய பணியாளரிடம் அதனை தெரிவித்திருக்கிறது. அந்தப் பணியாளர் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்து வந்து திரும்பக் கொடுத்து விடுவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், இதற்காக காத்திருந்த நிறுவனத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
அந்த ஊழியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு அந்த பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டார். தற்போது அந்நிறுவனம் அந்த ஊழியர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் மூலம் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறது.