குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணி மகாராஜபுரம் பகுதியில் இசக்கி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால சுனிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இசக்கிராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து தனது மனைவி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த இசக்கி ராஜ் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின் வேலைக்கு சென்ற மனைவி திரும்பி வந்து பார்த்த போது தன் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.