Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் தவித்த உறவினர்கள்… விடுதியில் நடந்த சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் பாலகிருஷ்ணன் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலகிருஷ்ணன் மீண்டும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தனர். இந்நிலையில் ஒரு தனியார் விடுதியில் பாலகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று பாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக பாலகிருஷ்ணனின் மனைவி காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |