ஐ.டி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக எவரெஸ்ட் குரூப்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பல ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் வேலை பார்த்த ஊழியர்களும் வேலையை இழந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எவரெஸ்ட் குரூப் தகவல் தெரிவித்துள்ளது. டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து கடந்த 2020- 21 ஆம் நிதியாண்டில் 72 ஆயிரம் ஊழியர்களை புதிதாக வேலைக்கு அமர்த்தியுள்ளன. வருங்காலத்திலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.