Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நம்பி அவங்க கூட போனேன்… செயலி மூலம் பணம் மாற்றம்…. நிறுவன மேலாளரின் பரபரப்பு புகார்…!!

தனியார் நிறுவன மேலாளரை வாலிபர்கள் கடத்தி சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராகவேந்திரா அப்பார்ட்மெண்ட் பகுதியில் புஷ்கர் பால்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் லேலண்ட் யூனிட் இரண்டாவது சீனியர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் தாமாகவே முன்வந்து புஷ்கரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் புஷ்கரை வீட்டில் இறக்கி விடாமல் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் புஷ்கரை கடத்திய பிறகு அந்த இரண்டு வாலிபர்களின் நண்பர்களான மேலும் 2 வாலிபர்கள் இணைந்து அவரை காரில் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து புஷ்கர் பால் சிங்கைத் தாக்கிய அந்த வாலிபர்கள் அவரது செல்போன் செயலி மூலம் 5 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொண்டனர். அதன் பின் அவரை சாலையில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஓசூர் ஹட்கோ காவல் நிலையத்தில் புஷ்கர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அடீப், ரோஷன், யார்ப் இர்பான் ஆகிய 4 பேரும் இணைந்து புஷ்கரை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |