இரண்டு கடிதங்கள் எழுதி வைத்து விட்டு தனியார் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியில் சஜய்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த சஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சஜய்குமார் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சஜய்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சஜய்குமார் எழுதிய 2 கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் ஒரு கடிதம் ஆங்கிலத்திலும், மற்றொன்று மலையாளத்திலும் எழுதப்பட்டுள்ளது.
அதாவது சஜய்குமாருடன் பணிபுரியும் அதிகாரி ஒருவர் அவரை திட்டியதால் மன உளைச்சலில் சஜய்குமார் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த இரண்டு கடிதங்களில் சஜய்குமார் எழுதியிருந்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.