Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு காலத்தில் பணம் வசூலா…? நிறுவனங்களுக்கு அறிவுரை… அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலங்களில் பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் வேலைகளை செய்ய முடியாமல் பொருளாதார பிரச்சனையில் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களை வற்புறுத்தி பணம் வசூலிக்கின்றனர்.

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் மணப்பாறை தாசில்தார் ஜலபதிராஜன் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்களை சேர்ந்தவர்களும், புகார் அளித்த பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து தனியார் நிதி நிறுவனங்கள் ஊரடங்கு காலகட்டத்தில் பொதுமக்களை வற்புறுத்தி பணம் வசூலிக்க கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பொதுமக்களிடமிருந்து ஊரடங்கு காலத்தில் வற்புறுத்தி தனியார் நிதி நிறுவனங்கள் பணம் வசூலிக்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |