Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி மண் அள்ளிய… தனியார் மண் குவாரி… முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

அனுமதி பெறாத இடங்களில் மணல் அள்ளிய தனியார் மண் குவாரியை டிப்பர் லாரி சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் உள்ள புலிக்குத்தி மலை அடிவார பகுதியில் தனியார் மண் குவாரி ஓன்று செயல்பட்டு வருகின்றது. இது தேனி மாவட்ட கனிம வளத்துறையிடம் அனுமதி பெற்றதாகும். இந்நிலையில் இந்த குவாரியில் அனுமதி பெற்ற இடத்திற்கும் மேலாக முறைகேடாக மண் அள்ளப்படுவதாகதகவல் கிடைத்துள்ளது. இதனை கண்டித்து டிப்பர் லாரி சங்கத்தினர் அந்த மண் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற கனிமவளத்துறை ஆய்வாளர் பரமசிவம்,  உத்தமபாளையம் துணை தாசில்தார் முருகன், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அனுமதி இல்லாத இடங்களில் அரசு விதிமுறைகளை மீறி மண் எடுக்கும் அனுமதி சீட்டை திருத்தம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன்பின் கனிமவளத்துறை அதிகாரிகள் குவாரிக்குள் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து குவாரியில் இருந்த 3 டிப்பர் லாரிகள், டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இச்சம்வம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |