Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BIG BREAKING : தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது …!!

தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது என தனியார் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தனியார் பள்ளி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் செய்யக்கூடாது என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே போல முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும், முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தினால், கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |