Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”தனியார்”னா வாங்க… ”அரசு”னா வராதீங்க… ஸ்பைஸ் ஜெட் விமானம் அடாவடி

கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து  அரசு மருத்துவமனை வழங்கிய பரிசோதனை சான்றிதழ் செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சொல்லி பயணிகளை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று 9:15 மணிக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் துபாய்க்கு செல்ல கிளம்பியது.  இதில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பயணிகள் வந்திருந்தனர். கொரோனா விதிமுறைகளால் முன்னதாகவே வந்து அதற்கான நடைமுறைகளை விமானத்தில் செய்து கொண்டிருந்தன. இந்த நிலையில் குடியேற்றத் துறை சோதனைகள் முடிந்து விமானத்தில் செல்வதற்கு முன்பாக பயணிகளின் பரிசோதனை முடிவுகள் செல்லாது என கூறி பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு விமான நிலைய ஊழியர்கள் மறுத்துவிட்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணி கூறும்போது, அரசு மருத்துவமனையில் தான் கொரோனா பரிசோதனை சான்றிதழ் எடுத்தோம். ஆனால் அதனை செல்லாது என்று ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் சொல்கிறார்கள். 170 பேர் செல்லக்கூடிய தனியார் விமானத்தில் 200 பேர் வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள். விமானத்தில் செல்ல முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்ட விதிமுறைகளில் எந்த மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற எந்த தகவலும் இல்லை. பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி விமானத்தில் அனுமதிக்க மறுக்கிறார்கள். 9 15 மணிக்கு புறப்படும் விமானத்திற்கு 8.45 மணிக்கு வேறு இடத்தில் பரிசோதனை செய்து வாருங்கள் என்று விமான நிலைய ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவிக்கிறார்கள் என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |