பிரியா பவானி சங்கர் ஒல்லியாகி விட்டார் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய அவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் தற்போது கார் முன் அமர்ந்தபடி ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பார்க்கும் பலரும் பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இவர் முன்பிருந்த எடையை விட தற்போது எடை குறைந்து ஒல்லியாக தெரிகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.