சிம்பு படத்தில் பிரியா பவானிசங்கர் கவுதமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியா பவானிசங்கர் சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி வந்தவர் ஆவார். இதையடுத்து சின்னத்திரையில் பிரபலமான இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தது. இதையடுத்து இவர் மேயாத மான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தற்போது சிம்பு கலக்கி வருகிறார்.
இப்போது தான் சிம்பு பழைய சிம்புவாக மாறி இருக்கிறார். மேலும் சிம்புவிடம் சமீப காலமாக மற்றம் தெரிகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவகிறது. கன்னட ரீமேக் படமான மப்டி தமிழில் பத்து தல என்ற பெயரில் படமாகிறது. இதில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர். கவுதம் ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார்.