Categories
இந்திய சினிமா சினிமா

பொது இடத்தில் முத்த மழையால் அன்பை வெளிப்படுத்தும் பிரியங்கா – நிக் ஜோனஸ்

ஹாட் தம்பதிகள் என உசுப்பேற்றியவர்கள் முன்னிலையில் லிப்கிஸ் செய்து தங்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர்.

வாஷிங்டன்: கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகைதந்த பிரியங்கா – ஜோனஸ் தம்பதியினர், பேட்டியின்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்த்தி அனைவரையும் பரவசப்படுத்தினர். ஹாலிவுட் ஹாட் தம்பதிகளாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் – அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸும் வலம்வருகின்றனர். இதில் பிரியங்காவைவிட ஜோனஸ் 10 வயது குறைந்தவராக இருந்தாலும், இருவருக்குள்ளான கெமிஸ்ட்ரி பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும்விதமாக இருக்கிறது.

காதலிக்கும்போதும், திருமணத்துக்கு பின்னும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சுற்றிவரும் இவர்கள், அமெரிக்காவில் நடைபெற்ற 77ஆவது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்கு வருகைதந்தனர். சிவப்பு கம்பள வரவேற்பின்போது இவர்களிடம் பேட்டி கண்ட நடிகர் ஸ்காட் இவன்ஸ், டிவி பிரபலம் கேட் ஹூவர் ஆகியோர், நட்சத்திர தம்பதியிடம் குறும்பான கேள்விகளைக் கேட்டனர். அப்போது இருவருக்குள்ளும் இருக்கும் ஹாட் கெமிஸ்டரி பற்றி குறிப்பிட்டனர்.

இதையடுத்து தங்களுக்குள் இருக்கும் அன்பை யாரும் எதிர்பாராதவிதமாக லிப் கிஸ் கொடுத்து பிரியங்கா – ஜோனஸ் வெளிப்படுத்தி அங்கிருந்தவர்களைப் பரவசப்படுத்தினர்.

https://www.instagram.com/p/B6-fvfCB-dW/?utm_source=ig_web_button_share_sheet

இந்த முத்தத்தின்போது தனது உதட்டிலிருந்த லிப்ஸ்-டிக், ஜோனஸ் உதட்டில் ஒட்டிக்கொள்ள உடனடியாக அதை அகற்றினார் பிரியங்கா.

இவர்கள் இருவரும் இதேபோன்று பலமுறை பொது இடங்களில் வைத்து தங்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

https://www.instagram.com/p/B6-ib5dB3rp/?utm_source=ig_web_button_share_sheet

கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னர் பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் லைக்குகளை கிளிக்செய்து குவித்தனர்.

 

 

https://www.instagram.com/p/B6905Y2J6T1/?utm_source=ig_web_button_share_sheet

இந்த விருது நிகழ்ச்சிக்கு, மினுமினுக்கும் நெக்லஸுடன், பிங்க் நிறத்திலான நீளமான கவுன் அணிந்து பிரியங்காவும், கறுப்பு நிற கோட் சூட்டுடன் ஜோனஸும் வந்திருந்தனர்.

 

 

https://www.instagram.com/p/B691CWLJVB6/?utm_source=ig_web_button_share_sheet

போட்டோவுக்காக போஸ் கொடுத்த இந்தப் பிரபலங்களை இடைவிடாமல் தங்களது புகைப்படக்கருவிகளில் பதிவுசெய்துகொண்டனர் புகைப்படக்காரர்கள்.

Categories

Tech |