இந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் எழும்போது யுனிசெப் நல்லெண்ணத் தூதுவராக கடமையாற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஒருதலைப்பட்சமாக செயற்படுவதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கத்தினால் ஐ.நா-வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு–காஷ்மீர் பிரச்சனையில் நடிகை பிரயங்கா சோப்ரா இந்தியாவிற்கு சார்பாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும், புல்வாமா தாக்குதல் சம்பவத்திலும் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இதன்காரணமாக அவரை பதவியில் இருந்து நீக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் துறை அமைச்சர் ஷெரின் மசாரியிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு முதல் யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதுவராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.