குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது.
இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி கூறுகையில் , குற்றவாளிக்கு அதிகாரமளித்ததை பாஜக ஒப்புக் கொண்டுள்ளது.உத்தபிரதேச மாநில அரசு தன்னை திருத்திக் கொள்ளவும் , அளவிட முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையிலான திசையில் செல்ல சில நடவடிக்கைகளை எடுத்து உத்தரபிரதேச காட்டு ராஜ்ஜியம் கட்டவிழ்த்து விடப்பட்டதை அறிந்து கொண்டு நடவடிக்கை எடுத்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.