‘தலைவர் 169’ படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 169’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு அசத்தலான வீடியோவுடன் வெளியானது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தில் இவருக்கு கதாநாயகியாக பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில் இவருக்கு மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை பிரியங்கா மோகனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.