Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக , தனக்கு எதிராக கோஷம்” கைகொடுத்து வாழ்த்திய பிரியங்கா….!!

தனக்கு எதிராக கோஷமிட்டவர்களை சந்தித்து கைகுலுக்கி சிரித்து பேசியபடி பிரியங்கா காந்தி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்தியா  முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றார்.மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரட்லம் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி குதித்து மக்களை சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதே போல பிரியங்கா காந்தி நேற்று தேர்தல் பிரசாரத்திற்கு காரில் செல்லும் போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோடிக்கு ஆதரவாகவும் , பிரியங்கா காந்தி_க்கு எதிராகவும் முழக்கமிட்டனர். அப்போது காரை நிறுத்திய  அவர் காரில் இருந்து இறங்கி சென்று தனக்கு எதிராக முழக்கமிட்டவர்களை சந்தித்து அவர்களுடன் கை குலுக்கி  சிரித்து பேசிவிட்டு சென்றார். இதனால் அங்கு கோஷமிட்டு கொண்டிருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நின்றனர். இந்த வீடியோ சமூக வேலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |