முன்னணி நடிகர் விக்ரம் படத்தில் பிரியங்கா ரோபோ சங்கர் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பின்பு தனது திறமையினால் திரைத்துறையில் படிப்படியாக உயர்ந்தவர் ரோபோ ஷங்கர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் அவர்களும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் அவ்வபோது பங்கேற்று வருகிறார்.
ஆனால் இவர் திரைப்படத்தில் ஒன்று நடித்துள்ளார் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. அவர் எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்றால், விக்ரம் நடிப்பில் வெளியான தூள் திரைப்படத்தில்தான் பிரியங்கா ரோபோ சங்கர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் நடிகை லைலா பங்கேற்கும் சமையல் நிகழ்ச்சியை பிரியங்கா ரோபோ ஷங்கர் தான் தொகுத்து வழங்கியிருப்பார்.