Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5ல் பங்கேற்கும் பிரியங்கா… உறுதியான தகவல்…!!!

பிக் பாஸ் 5ல் தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பணியாற்றி வரும் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஏனென்றால் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார்.

இந்நிலையில் விஜய் டிவியின் மற்றொரு பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன்5 கூடிய விரைவில் வர இருப்பதால் தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் 5ல் பங்கேற்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதற்கேற்றவாறு ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் 2 சீசன் களை பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் தற்போது 3வது சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த சீசனின் முதல் நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் மாகாபா தொகுத்து வழங்கியுள்ளார். இதன் மூலம் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.

Categories

Tech |