தலை வலிக்கு மருந்து வாங்கப் போனவர் வாங்கி வந்த லாட்டரி சீட்டில் 5 லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் Olga Ritchie. இவருக்கு தலைவலி ஏற்பட்டு அதன் காரணமாக மார்க்கெட்டிற்கு மருந்து வாங்க சென்றுள்ளார். மருந்து வாங்கி வருகையில் அங்கு விற்கப்பட்ட மெகா மணி சுரண்டல் லாட்டரி சீட்டுகளையும் வாங்கியுள்ளார். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக எதிர்பாராமல் வாங்கிய அந்த லாட்டரிச் சீட்டுகளுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் டாலர் அவருக்கு விழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில் தலைவலி ஏற்பட்டதால் தான் இந்த பரிசு எனக்கு கிடைத்துள்ளது என கூறினால் மிகையாகாது. என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை. இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் கிடைத்த பணத்தில் வீட்டை புதுப்பித்து மீதி இருக்கும் பணத்தை சேமிக்க முடிவு செய்துள்ளேன் என கூறினார்.