3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 9 அணிகள் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் சுற்றில் ஸ்பெயினுடன் 2 முறை மோதுகிறது.
இப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் விளையாடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணியில் புதுமுக வீரராக பஞ்சாப்பை சேர்ந்த சுக்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி : ஸ்ரீஜேஷ், சுராஜ் கார்கெரா, பின்களம்: ஹர்மன்பிரீத் சிங் (துணை கேப்டன்), மன்தீப் மோர், சுரேந்தர் குமார், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், திப்சன் திர்கே, நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), விவேக் சாகர் பிரசாத், ஹர்திக் சிங், ஜஸ்கரன் சிங், ஷாம்ஷெர் சிங், நீலகண்ட ஷர்மா, ஆகாஷ்தீப் சிங், முன்களம்: மன்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், அபிஷேக்.