9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ,13-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் அணியுடன் மோதியது.
இதில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது.இதை தொடர்ந்து இந்திய அணி தனது 2-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.