3-வது புரோ ஹாக்கி லீக் போட்டியில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
9 அணிகள் பங்குபெறும் 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது .இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டங்களில் பிரான்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியுடன் 2 முறை சந்திக்கிறது. இப்போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடக்கிறது. நடைபெறுகிறது .இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி ,13-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது.
கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மோதுகின்றன. இதனால் இப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இறுதியாக நடந்த உலக லீக் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் என்ற கணக்கில் இந்திய அணி பிரான்சை வீழ்த்தியது .இப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.