Categories
விளையாட்டு

புரோ ஹாக்கி லீக்: ஸ்பெயினை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி ….!!!

புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
9 அணிகளுக்கு இடையிலான 3-வது புரோ ஹாக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடைபெற்று  வருகிறது. இதில் ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாலையில் நடைபெற்ற மகளிர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி  2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
இந்திய அணி தரப்பில் ஜோதி 20-வது நிமிடத்திலும், நேஹா 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 3-வது வெற்றியை ருசித்துள்ளது.இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் ஸ்பெயின் அணியுடன்  மோதுகிறது.

Categories

Tech |